Ticker

6/recent/ticker-posts

கர்த்தர் சிருஷ்டித்த சகல | Karthar Sirustitha Sahala | PPT



கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

வானங்களே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

மழையே, பனியே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

தேவனுடைய காற்றுகளே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

அக்கினியே, உஷ்ணமே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

மாரிகாலமே, கோடை காலமே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

இரவே, பகலே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

ஒளியே, இருளே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

மின்னல்களே, மேகங்களே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

மலைகளே, குன்றுகளே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

பூமியில் முளைத்தெழும்பும் எல்லாத் தாவரங்களே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

ஆகாயத்துச் சகல பறவைகளே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

காட்டு மிருகங்களே, நாட்டு மிருகங்களே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

மனுமக்களே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

கர்த்தரின் ஊழியக்காரரே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

நீதிமான்களின் ஆவிகளே, ஆத்துமாக்களே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

பரிசுத்தமும் தாழ்மையுமுள்ள இருதயமுடைய மனிதர்களே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

                                       


Post a Comment

0 Comments