கர்த்தரை போற்றியே வாழ்த்துது
கனிந்துமே என் ஆத்துமா
களிக்குதே என் ஆவி கருணை
கூர்ந்தனர் பரமாத்துமா
இன்று தன் அடிமையின் தாழ்மையை
இறையவர் கண்ணோக்கினார்
என்றென்றும் எல்லோரும் புகழ
என்னை தன் மயமாக்கினார்
பரிசுத்த நாமம் மகிமையாய்
பகுத்தார் அனைத்தும் நல்லது
பயந்தவர்களுக்கவர் இரக்கம்
பரம்பரைகளுக்குள்ளது
ஆண்டவர் தம் புயத்தை உரைத்தி
பராக்கிரமம் செய்திட்டார்
அகந்தையுல்லோரை சிதறடிக்க
அன்பர் கருள்மாரி பெய்தார்
♬ Song audio available below ☟
0 Comments