1. நீர் திவ்விய வழி, இயேசுவே
நீர் பாவநாசர்தாம்,
பிதாவிடத்தில் சேர்வதும்
உமது மூலமாம்.
2. நீர் திவ்ய சத்தியம் இயேசுவே
உம் வாக்கு ஞானமாம்;
என் நெஞ்சில் அதின் ஜோதியால்
பிரகாசமும் உண்டாம்.
3. நீர் திவ்விய ஜீவன், இயேசுவே
வெம் சாவை ஜெயித்தீர்;
உம்மைப் பின்பற்றும் யாவர்க்கும்
சாகாமை ஈகுவீர்.
4. நீர் வழி, சத்தியம், ஜீவனும்
அவ்வழி செல்லவும்;
சத்தியம் பற்றி, ஜீவனை
அடையவும் செய்யும்.


0 Comments