1. பாவி வா, பாவி வா, பரனண்டையே வா,
பாவப்பாரம் சுமந் திளைத்தோனே, நீ வா.
2. பாவி வா, பாவி வா, திகையாதே நீ வா,
வரும் பாவியை ஓர் போதும் தள்ளேனே வா.
3. காணா தாட்டை மேய்ப்பன் தேடும் மாதிரிபோல்
நானே நல்ல மேய்ப்பன் உன்னைத் தேடி வந்தேன்.
4. தாகம் மிகுந்தோனே தண்ணீரண்டை நீ வா
தாகம் தீர்த்திடுவேன் ஜீவ தண்ணீரினால்.
5. உந்தன் பாவத்துக்காய் நானே பாடுபட்டேன்
எந்தனுக்கு உந்தன் நெஞ்சம் தந்திடவா.
6. உனக்காய் மரித்தேன் ஈனக் கோலமதாய்
எனக்கே உனையே படைப்பாய் நிதமே.


0 Comments